உலகம் முழுவதும் 32 லட்சம் பேருக்கு கொரோனா
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 32 லட்சத்து 5 ஆயிரத்து 726 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 812 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-
அமெரிக்கா – 10,55,303
ஸ்பெயின் – 2,36,899
இத்தாலி – 2,03,591
பிரான்ஸ் – 1,66,420
இங்கிலாந்து – 1,65,221
ஜெர்மனி – 1,61,173
துருக்கி – 1,17,589
ரஷியா – 99,399
ஈரான் – 93,657
சீனா – 82,858
பிரேசில் – 78,162
கனடா – 51,231
பெல்ஜியம் – 47,859
நெதர்லாந்து – 38,802
பெரு – 33,931
இந்தியா – 31,787
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply