தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்

 Sengottayan

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதி நடைபெறும். 12-ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4-ந்தேதி தேர்வு நடைபெறும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27-ந்தேதி தொடங்கும். பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 10 கல்லூரிகளில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு அட்டவணை விவரம்:-

ஜூன் 1-ந்தேதி : மொழிப்பாடம்
ஜூன் 3-ந்தேதி : ஆங்கிலம்
ஜூன் 5-ந்தேதி : கணிதம்
ஜூன் 8-ந்தேதி : அறிவியல்
ஜூன் 10-ந்தேதி : சமூக அறிவியல்
ஜூன் 6-ந்தேதி : விருப்ப மொழிப்படம்
ஜூன் 12-ந்தேதி : தொழிற்பாடம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply