ஒரு சிலரை விலைக்கு வாங்கலாம் – ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் வாங்க முடியாது : சாள்ஸ் நிர்மலநாதன்

அந்நிய தலையீடு இன்றி தமிழ் மக்கள் ...

தமிழர்களின் தனித்துவத்தை இல்லாதொழிப்பதற்காகவும் எம் இன மக்களை அழிப்பதற்காகவும் எமது மக்களிடமே ஜனநாயக உரிமையை பெற்று கொள்ள துடிக்கின்றார்கள். பண பலம் பொய் வாய்குறுதிகளை வழங்குகின்றார்கள். எனவே மக்கள் இம்முறை எமது இருப்பை பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி பாராளுமன்ற வேட்பாளருமான சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் வங்காலை பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய மக்களை அழிப்பதற்கு எங்களுடைய இன அடையாளங்களை அழிப்பதற்கு நாங்கள் யாரை ஜனாதிபதியாக வரக்கூடாது என்று நினைத்தோமோ இன்றைக்கு ஆட்சி பீடம் ஏறிக்கொண்டு எங்களை அழித்தவர்கள் எங்களிடம் அதிகாரம் கேட்கின்றார்கள்.

ஜனநாயக ரீதியாக உரிமை கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் சொந்த நலனுக்காக எங்கள் மக்களை விற்கின்றார்கள். ஒரு சிலரை விலைக்கு வாங்களாம். ஆனால் எங்கள் இனத்தை விலைக்கு வாங்க முடியாது.

ரிஷாட் பதியுதீன் தற்போது ஒரு பலமான ஆள் இல்லை. ஆனாலும் கடந்த தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் கனிசமாக அவருக்கு விழுந்தது. மூன்று மாவட்டங்களிலும் ஒவ்வொறு தமிழரை வேட்பாளராக நிறுத்தி அவர்களுடைய வாக்குகளால் ரிஷாட் பாராளுமன்ற உறுப்பினராக வருவார்.

இப்போது அதே வித்தையை சிறிலங்கா பொது ஜன பெரமுன பின்பற்றுகின்றது. மூன்று மாவட்டங்களிலும் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி கட்சிக்கு வாக்கை பெற்றுக்கொள்வதற்கு கடந்த தேர்தலில் ரிசாட் பதியுதீனுக்கு கட்சி சார்பாக ஒரு போனஸ் ஆசனம் கிடைத்தது.

ஏன் ரிஷாட் பதியுதீன் அந்த போனஸ் ஆசனத்தை தமிழர்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் வந்தவ ஒரு தமிழருக்கு கொடுக்கவில்லை.

மூன்று தடவைகள் மாறி மாறி முஸ்லீம் இனத்தவர்களுக்கே கொடுத்தார். புத்தளத்தை சேர்ந்தவருக்கு கொடுத்தார். அம்பாறையை சேர்ந்தவர்களுக்கு கொடுத்தார். ஏன் வன்னியில் கேட்ட வேட்பாளர்களுக்கு கொடுக்கவில்லை. ஏன் என்றால் அந்த ஆசனத்தை தமிழர்களுக்கு கொடுத்தால் முஸ்லீம்கள் ரிஷாட் பதியுதீனுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

கடந்த முறை ரிஷாட் பதியுதீனின் கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட எந்த தமிழனுக்கு முஸ்லீம்கள் வாக்களிக்கவில்லை. இன்று பொதுஜன பெரமுனவில் கேட்கும் எந்த தமிழர்களுக்கும் முஸ்லீம்கள் வாக்களிக்க போவதில்லை. எந்த சிங்கள மக்களும் போட மாட்டார்கள். இது தான் உண்மை.

எங்களுடைய வாக்குகளை சிதறடித்து விட்டு எங்கள் தனித்துவத்தை அழிக்க நினைக்கிறார்கள். ஏன் என்று சொன்னால் இன்று ஐ.நா மனித உரிமை பேரவையில் இருக்கின்ற தீர்மானத்தை செயலிலக்க செய்ய வேண்டும். அதை செயலிலக்க செய்ய வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் தனித்துவமாக இருக்க கூடாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்க கூடாது இதுதான் காரணம். இதற்காக பொய் வாக்குறுதிகள் வழங்குகின்றார்கள். எமது மக்களை தேர்தல் காலங்களில் ஏமாற்றுகின்றார்கள். ஏமாற்றி அதற்கான பலன்களையும் பெற்று இருக்கின்றார்கள்.

ஆனாலும் 2020 தேர்தலில் எங்கள் மக்கள் வீட்டு சின்னத்திற்கு முழுமையாக வாக்களிக்க வேண்டும். வாக்களித்தால் மட்டும் தான் எங்கள் தனித்துவத்தை தக்க வைத்துக்கொள்ளாம். எங்களுக்கு இம்முறை மிகப்பெரிய ஆபத்து இருக்கின்றது.

தமிழர்களின் தனித்துவத்தை இல்லாதொழிப்பதற்காக எம் இன மக்களை அழிப்பதற்காக எமது மக்களிடமே ஜனநாயக உரிமையை பெற்று கொள்ள துடிக்கின்றார்கள்.

பணபலம் பொய்வாய்குறுதிகளை வழங்குகின்றார்கள். எனவே மக்கள் இம்முறை எமது இருப்பை பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply