இன்று பிறந்த நாள்… ரசிகர்கள், கட்சி தொண்டர்களின் வாழ்த்து மழையில் கமல் ஹாசன்
நடிகரும் மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் இன்று 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டனர்.
திறந்த வேனில் நின்றபடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை கமல் சந்தித்தார். அப்போது அவரை வாழ்த்தி ரசிகர்கள் முழக்கமிட்டனர். அவர்களின் வாழ்த்துக்களை கை கூப்பி ஏற்றுக்கொண்ட கமல், அவர்களுக்கும் தனது வாழ்த்துக்ளை தெரிவித்தார்.
இதேபோல் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல் ஹாசன், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். இதனால் கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் களப்பணியை தொடங்கி உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply