துணை அதிபருக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்திய இந்திய நர்ஸ் பெருமிதம்

kerala

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சூசம்மா மாத்யூ. இவர் அந்த மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மீனோடம் என்ற சிறு கிராமத்தில் இருந்து துபாய் வந்தார். கடந்த 1992-ம் ஆண்டில் இருந்து துபாய் அரசு சுகாதாரத்துறையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அமீரகத்தின் முக்கிய மந்திரிகள் மற்றும் துணை அதிபருக்கு தடுப்பூசி போடுவதற்கான மருத்துவ குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமீரக துணை அதிபருக்கு கடந்த 3-ந் தேதி கொரோனா தடுப்பூசி மருந்தை உடலில் செலுத்தினார். அவருக்கு தடுப்பூசி போட்ட அனுபவம் பற்றி சூசம்மா மாத்யூ கூறியதாவது:-

நான் எப்போதும் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை சந்திக்க வேண்டும் என்று நினைப்பது உண்டு. இறைவன் எனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டார். அது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாகும். என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.

மருத்துவ குழுவினருடன் நான் அவருக்கு ஊசி போட சென்றபோது துணை அதிபர் மிகவும் கனிவுடன் எங்களை பற்றி விசாரித்தார். எங்களது சேவை குறித்து அவர் பாராட்டினார். எனது கனவு நனவாகி விட்டதாக கருதுகிறேன். மீண்டும் 2-வது கட்ட ஊசியை போடும் நாளை எதிர்பார்த்துள்ளேன்.

மேலும் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிற்கு தடுப்பூசியை போட வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் புர்ஜ் கலீபா கட்டிடத்திற்கு சென்றதில்லை. அங்கு யாராவது பிரபலங்களுக்கு தடுப்பூசி வழங்க நேர்ந்தால் அதை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். நான் ஊசி போட்டால் யாருக்கும் வலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply