தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து நைஜீரியாவிலும் உருமாற்ற கொரோனா வைரஸ் பரவுகிறது

இங்கிலாந்தில் கொரோனா வைரசின் உருமாற்றம் அடைந்த புதிய மாறுபாடு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து நைஜீரியாவிலும் மரபணு மாற்றம் பெற்ற மற்றொரு கொரோனா வைரஸ் பரவி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து ஆப்பிரிக்க நோய்தொற்று தடுப்பு மையம் கூறும்போது, ‘நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஆனாலும் அந்த வைரஸ் குறித்து விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தனது மரபணுவை மாற்றிக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை உள்ள நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்த மற்றொரு கொரோனா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply