வீதி விபத்துகளில் நேற்று 11 பேர் உயிரிழப்பு
ஹன்வெல்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 11 பேர் நேற்று நடந்த அபாயகரமான விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மீகஹவத்தையில் பொலிஸ் கான்ஸ்டபிளின் வாகனம் மற்றொரு வாகனம் மீது மோதி விபத்து நிகழ்ந்ததாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் அபாயகரமான வீதி விபத்துகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
கொவிட்-19க்கு முன்னர் தினமும் சுமார் 8 – 10 அபாயகரமான விபத்துகள் பதிவாகியுள்ளன. தொற்றுநோய் நிலையின் போது, விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை, தற்போது படிப்படியாக மீண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.
தவறாக வாகனம் செலுத்துவோரைக் கைது செய்வதற்காக வார இறுதியை இலக்கு வைத்து சிறப்பு போக்குவரத்து நடவடிக்கையை பொலிஸார் நாளை தொடங்கவுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply