அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொழுகையில் ஈடுபட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க அதிபராக பதிவேற்றதும் ஜோ பைடன் 17 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இவற்றில் ஏழு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்கு வர முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த தடை உத்தரவை தளர்த்துவதும் இடம்பெற்று இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பலர் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் நாடு முழுக்க சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் பைடன் அமெரிக்க அதிபரானதும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழுகையின் போது எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது செப்டம்பர் 25, 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் கேபிடல் ஹில் வளாகத்தில் இஸ்லாம் எனும் சிறப்பு தொழுகையின் போது எடுக்கப்பட்டது ஆகும். இந்த தொழுகை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் நடைபெற்றது.
மேலும் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட இணைய தேடல்களில் வைரல் புகைப்படத்தை அலெக்ஸ் வொங் என்பவர் எடுத்து இருக்கிறார் என முன்னணி புகைப்பட வலைதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த வகையில் வைரல் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply