அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூல்
உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டகடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.
ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்றுகோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை திரட்டும் பணி கடந்த 15-ம் தேதி தொடங்கியது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். நாடு முழுவதும் 5.25 லட்சம் கிராமங்களில் நன்கொடை வசூல் செய்யும் பணி வரும் பிப்ரவரி 27-ம் தேதி வரை முழுவீச்சில் நடைபெற உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான கர்நாடக மாநில உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து தரப்பினரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கி உள்ளனர். இது மக்களின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply