இலங்கையில் 48 மணிநேரத்தில் வீதி விபத்தில் 30 பேர் பலி
நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 08 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மற்றும் அதற்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச் சை பலனின்றி மேலும் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விசேடமாக இலங்கையில் ஏப்ரல் 14 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 15ஆம் திகதி களில் அதிக வீதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
அத்துடன் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி 14 பேர் உயிரிழந்துள்ளனர் இந்நிலையில், இன்றைய தினம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி கடந்த 48 மணிநேரங்களில் வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேற்று முன்தினம் 74 பேர் காயமடைந்துள்ளதா கவும் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் 86 பேர் நேற்றைய தினம் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 48 மணிநேரங்களில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 12 மோட்டார் சைக்கிள் சாரதிகள், பாதசாரிகள் 02 பேர் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply