சிங்கப்பூரில் இருந்து வந்த அவசர அம்பியூலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர் யார்?

சிங்கப்பூரில் இருந்து இன்று முற்பகல் இலங்கை வந்த அவசர அம்பிலன்ஸ் விமானம் ஒன்று இலங்கை நபர் ஒருவரை சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளது. குறித்த நபர் யார் என்பது இன்னும் வௌிவரவில்லை.

எனினும் பிரபு பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமக்கு தெரியவருகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் அதிகரித்து காணப்படும் நிலையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிங்கப்பூர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அனுமதிப்பது இல்லை என்பதால் குறித்த விசேட நபர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படடது மங்களவா?

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். USAID பிரதானி சமந்தா பவரின் தலையீட்டில் மங்கள சமரவீரவை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல குறித்த அம்புலன்ஸ் விமானம் வந்ததாக தெரியவருகிறது.

ஆனாலும் சிங்கப்பூர் கொரோனா தொற்றாளர்களை அனுமதிப்பது இல்லை என்பதால் அந்த தகவல் வதந்தியாகும். மங்கள சமரவீரவின் நெருங்கியவர்கள் கூறும் கருத்துபடி அவர் லங்கா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply