உடனடியாக திரவ ஒட்சிசன் வழங்கி உதவுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை

2021 ஆகஸ்ட் 20ஆந் திகதி சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், முழு அளவில் அனைத்து நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான முன்னுரிமைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

வெளிநாட்டு அமைச்சரின் புதிய நியமனத்திற்காக சீனத் தூதுவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கையின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும், கோவிட்-19 தொற்றுநோயைத் தணிக்கும் முயற்சிகளுக்குமான சீனாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

கோவிட்-19 ஒத்துழைப்பு, மக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள், பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இந்தக் கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன. குறிப்பாக, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக திரவ ஒட்சிசனை உடனடியாக வழங்குவதற்கு சீனாவின் உதவியை வெளிநாட்டு அமைச்சர் கோரினார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த சந்திப்பின்போது இணைந்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply