ஆளும் கட்சியை பிளவுபடுத்த சர்வதேச சதி

ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன கூட்டணி அரசாங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்த சர்வதேச அளவில் சதித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சர்வதேச சதி வலையில் கூட்டணியின் சில சிறு கட்சிகள் விழுந்துவிட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதென அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நாட்டை முடக்குவதாக அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்த பின்னர் வௌியில் வந்து கடிதம் அனுப்புவது அத்துடன் ஊடகங்களுக்கு அதனை வழங்குவது சதித் திட்டத்தின் ஒரு அங்கம் என அவர் கூறினார்.

இவ்வாறு நாட்டை மூடுமாறு கடிதம் அனுப்பியதால் கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதாகவும் அரசாங்கத்திற்குள் பிளவு இருப்பதாகவும் வௌியில் பேசப்படுகிறது. இதனை சிறு கட்சிகள் நேரடியாக பேசித் தீர்த்திருக்க வேண்டும் என அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.

இதேவேளை, கடிதம் எழுதிய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply