தனி வழி பயணத்தை தொடங்கியது மைத்திரி அணி! புதிய கூட்டமைப்புக்கு தயார்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் அரசியல் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தவென கட்சியின் மத்திய குழு அனுமதி அளித்துள்ளதாக அதன் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் இயங்கிய ஐக்கிய மக்கள் சுமந்திர கூட்டமைப்பை மீள கட்டியெழுப்பு முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அவர்,
“கட்சியின் எதிர்கால பயணம், மாற்று அரசாங்கம், கட்சியின் முன்னேற்றம் மற்றும் இணைந்து செயற்படுவது குறித்து நாம் முடிவுகளை எடுத்துள்ளோம். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அரசாங்கத்தை கைப்பற்றிய கூட்டமைப்பு உள்ளது. நாம் மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளோம். அதன்படி இலங்கையில் உள்ள இடதுசாரி, தேசப்பற்று கட்சிகள் மற்றும் பாராளுமன்றுக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு கூட்டமைப்பை வலுப்படுத்த மத்திய குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அதன்படி எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply