பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு
தென் பிராந்திய அதி வேக பாதையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜப க்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் நடவடிக் கைகள் பற்றிய மீளாய்வுக் கூட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த அதிவேக பாதையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தரம் குறைந்த பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்களை நிர்மாணிப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.நிர்மாணப்பணிகளில் பல் வேறு கட்டட நிறுவனங்கள் ஈடுபட்ட போதிலும் அமைச்சு மட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண் டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வீதிகளை பராமரிப்பத ற்கு அரசாங்கம் வருடம் தோறும் பெருமளவு நிதியை செலவழிக்கிறது.கிராமிய வீதி அபிவி ருத்தியின் போது பொதுமக் களின் பங்களிப்பினை பெறு வதன் மூலம் செலவுகளை கட்டுப்படுத்த முடியும். வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் வேலைத் திட்டங்களின் கீழ் முன்னர் அபிவிருத்திக்கான அச்சுறுத் தல்களாக இனங்காணப் பட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண் டுமெனவும் ஜனாதிபதி கூறினார்.
வீதி அபிவிருத்திக்காக ஆகக் கூடிய நிதி ஒதுக்கீடாக இந்த வருடத்தில் 77 ஆயிரத்து 128 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply