இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் விசேட சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா- இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றதாக இந்திய இணய தள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்தின் புகாட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய வெளிவிகார அமைச்சர்கள் மாநாட்டின் போது இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
300000 தமிழ் பொதுமக்களை மீளக் குடியமர்த்துவது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு தாம் கோரியதாக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியைப் போன்று 180 நாட்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று தசாப்த காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்த தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply