சர்வதேச நாணய நிதியம் அரசின் மீது முழு நம்பிக்கை: அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்

மஹிந்த சிந்தனை கொள்கைகளுக்கு முரணான எந்த ஒரு நிபந்தனையையும் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கை தொடர்பான நம்பிக்கையின் அடிப்படையிலே சர்வதேச நாணய நிதியம் நாம் கோரியதை விட கூடுதலான நிதியை கடனாக வழங்க முன்வந்துள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் எமக்குக் கிடைத்த மிகப் பெரிய கடனுதவி இது எனவும், இந்தக் கடனுதவி இலங்கைக்கு கிடைத்திருப்பது யுத்த வெற்றிக்கு இரண்டாம் பட்சமாக கருத முடியாத வெற்றியாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர் கடனுதவியாக வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு இந்தக் கடனுதவி கிடைக்காது எனவும் பாரிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் எதிர்க் கட்சிகள் தெரிவித்து வந்த குற்றச்சாட்டுகள் யாவும் இன்று பொய்யாகியுள்ளன.

இலங்கைக்கு வழங்கப்பட உள்ள கடனுதவி குறித்து இன்று (24) நடைபெற உள்ள சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் உத்தியோகபூர்வ முடிவு எடுக்கப்பட உள்ளது.30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதாரத்தை மேம்படுத் தவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர் த்தவும் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனாலேயே இந்தக் கடனுதவியை வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது.

1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களே நாம் கடனாகக் கோரினோம். ஆனால் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன் வந்துள் ளது. இலங்கைக்குரிய கோட்டாவில் 400 மடங்கு தொகை எமக்கு கடனாகக் கிடைக்க உள்ளது.

இந்தக் கடன் தொகை சமமான எட்டுத் தவணைகளாக வழங்கப்பட உள்ளதோடு, முதலாவது தவணை இன்று ஆரம்பமாக உள்ளதோடு கடைசித் தவணை 2011 மார்ச் 15ஆம் திகதி கிடைக்க உள்ளது. ஒரு தவணை யில் 312 மில்லியன் டொலர் கிடைக்க உள்ளது. எமது அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் குறித்த நம்பிக்கையின் காரணமாகவே நாம் கேட்ட தொகையை விட கூடுதலாக தருவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை முன்னேற் றம் கண்டு வருகிறது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 28 வீதமாக இருந்த பணவீக்கம் தற்பொழுது 2 வீதமாகக் குறைந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 1.5 வீதமாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந் திருந்தது. ஆனால் தேயிலை, இறப்பர், கறுவா மற்றும் ஏற்றுமதிப் பொருட்களால் கிடைக் கும் வெளிநாட்டுச் செலாவணி அதிகரித்து வருவதோடு வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் அனுப்பும் அந்நியச் செலா வணியும் மூன்று வீதத்தினால் அதிகரித் துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வளம் 1.2 பில்லியன் டொலரில் இருந்து 1.7 பில்லியனாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதாலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூக த்தின் மத்தியில் இலங்கை குறித்த நம்பி க்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத் துள்ள நிபந்தனைகள் எதுவும் இலங்கைக் குப் பாதகமாக இல்லை. இலங்கைக்குச் சாதகமான கொள்கையையே சர்வதேச நாணய நிதியம் கொண்டுள்ளது. முரணான எந்த நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை.

வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை 6.5 வீதத்திற்கு மேற்படாதவாறு பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடு த்து வருகிறது. ஆனால் துண்டு விழும் தொகை 7வீதம் வரை அதிகரித்தாலும் எதுவித பிரச் சினையும் கிடையாது என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனினூ டாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இந்த கடனுதவி மூல மாக வட்டி வீதத்தை குறைக்கவும் வெளி நாட்டு செலாவணி வீதத்தை நிலையாக தக்கவைக்கவும் முடியும்.

சர்வதேச நாணய நிதிய கடன் காரண மாக இந்த வருட முடிவுக்குள் இலங்கை யின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5 ஆக உயரும். இந்த கடனுதவி காரணமாக இலங்கை யுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் நாடு களுக்கு எமது நாடு குறித்து பூரண நம்பி க்கை ஏற்படும்.

அரசாங்கம் முன்னெடுத்துவரும் கிராமிய அபி விருத்தித் திட்டங்கள் மகநெகும, கமநெகும, வறி யோரை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் எதுவித நிபந்தனையும் விதிக்க வில்லை. நாட்டின் பொருளாதார நிலைமை மோச மாக இருந்தால் சர்வதேச நாணய நிதியம் கடனு தவி வழங்க முன்வந்திருக்காது. இலங்கை குறித்து திருப்தி ஏற்பட்டதாலேயே இந்த நிதி கிடைக்க உள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply