மடுத்திருப்பதி ஓகஸ்ட் திருவிழாவில் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்
மடு மாதா தேவாலய ஓகஸ்ட் திருவிழாவையும், அதில் கலந்துகொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மடு மாதா திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு மடுதேவாலய நுழைவாயில் சந்தியில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் தகவல்களை திரட்டும் பொருட்டு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் பாதுகாப்பு தரப்பினர் விசேட படிவம் ஒன்றை தயாரித்துள்ளனர். தேவாலய நுழைவாயில் சந்தியில் அமைக்கப்ப ட்டுள்ள இடத்தில் இதற்கான விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ளது டன் இராணுவத்தினரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர்.பாதுகாப்புப் படையினர் தயாரித்துள்ள படிவத்தின் பிரதிகளை நேற்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டு வைத்தது.
பக்தர்களின் பாதுகாவலரின் பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன இலக்கம்,செசி இலக்கம், இன்ஜின் இலக்கம், வாகன உரிமையாளரின் பெயர், விலாசம், பினான்ஸ் லீசிங் கம்பனிகளின் விபரம், சாரதியின் பெயர், விலாசம், சாரதி அனு மதி பத்திர இலக்கம், காப்புறுதிப் பத்திர இலக்கம், வருமானப் பத்திரம், எவ்விடத் திலிருந்து வருகின்றார்கள், பக்தர்களின் தொகை ஆகிய விபரங்களே அந்த படி வத்தில் கோரப்பட்டுள்ளது.
பக்தர்கள் குழுவுக்கு பொறுப்பாக வரு பவர் மாத்திரம் படிவத்தை பெற்றுக் கொண்டு நிரப்பி பாதுகாப்பு படையின ரிடம் ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் இம்முறை மடு மாதா திரு விழாவை அரச அனுசரணையுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாட தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply