ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதி ரூ.96 கோடிக்கு ஏலம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கு (13 மில்லியன் டாலர்) ஏலம் போனது. பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், ஆல்பர்ட் கைப்பட எழுதிய பிரதியை ஏலத்திற்கு விட்டது. அப்போது ஏராளமான நபர்கள் பிரதியை வாங்க ஆர்வம் காட்டினர். இறுதியில் அந்த சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி 13 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.

சார்பியல் கோட்பாடு நூல் 1913-ம் ஆண்டு மற்றும் 1914-ம் ஆண்டின் முற்பகுதியில் ஐன்ஸ்டீன் மற்றும் மைக்கேல் பெஸ்ஸோ ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 54 பக்க கையெழுத்துப் பிரதி ஆகும்.

முன்னதாக இந்த கையெழுத்துப் பிரதியின் மதிப்பு 2.4 மில்லியன் முதல் 3.5 மில்லியன் டாலர்கள் என ஏல நிறுவனம் மதிப்பிட்டிருந்தது.

“ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு இயற்றிய காலம் பொது சார்பியல் கோட்பாட்டின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டமாகும். கோட்பாட்டின் நூல்களை ஆவணப்படுத்த எஞ்சி இருக்கும் இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் இதுவும் ஒன்றாகும்” என கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply