ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஆஸ்திரேலியா

ஹிஸ்புல்லா அமைப்பின அனைத்து பிரிவுகளையும் பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. லெபனான் மீது கணிசமான அதிகாரம் செலுத்தி வரும் இந்த இயக்கத்தின் ஆயுதப் பிரிவுகள் மீதான தடையை நீட்டித்துள்ளது.

ஈரான் ஆதரவு கொண்ட ஷியா குழுவானது, ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் உள்துறை மந்திரி கரன் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு பகுதி அரசியல் கட்சியாகவும், ஒரு பகுதி ஆயுதக் குழுவாகவும் மற்றொரு பகுதி லெபனானின் ஷியா சமூகத்திற்கு அடிப்படை சேவைகளை வழங்கும் இயக்கமாகவும் செயல்படுகிறது. இஸ்ரேல் மீதான பல ராக்கெட் தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து இன்றுவரை ஆயுதங்களை கைவிட மறுக்கும் ஒரே இயக்கம் இதுவாகும்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply