20 நாடுகளில் 226 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு
கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, இப்போது உலக நாடுகளில் எல்லாம் கால் தடம் பதிக்கத்தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி இருப்பதாக அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டனி பாசி கூறும்போது, “ இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து வித்தியாசமான உருமாற்றங்களை கொண்டுள்ளது. இருப்பினும் இது மிகவும் பரவக்கூடியதா என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளது” என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply