யாழில் கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

அதிகாலையில் வீட்டிலிருந்து காணாமல் போன வயோதிபர் ஒருவர் தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று (02)யாழ். கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கலட்டி கரணவாய் கிழக்கைச் சேர்ந்த செல்லத்துரை(80 வயது) எனும் வயோதிபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காணாமல் போனதை அடுத்து அவரது உறவினர்களால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் கரணவாய் பகுதியிலுள்ள கிணற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலத்தை பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply