முதலாம் உலகப்போர் முதல் கொரோனா தொற்று வரை பார்த்த உலகின் மிகவும் வயதான நபர் மரணம்
சமீபத்தில் உலகை உலுக்கிய கொரோனா தொற்று வரை பார்த்த உலகின் மிகவும் வயதான நபர் உயிரிழந்தார். உலகின் மிகவும் வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் (Lucile Randon) 118 வயதில் காலமானார்.
சகோதரி ஆண்ட்ரே என்று அழைக்கப்படும் லூசில் ராண்டன், பிப்ரவரி 11, 1904 அன்று தெற்கு பிரான்சில் பிறந்தார்.
அவர் டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் தூக்கத்தில் இறந்தார் என்று செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெல்லா தெரிவித்தார்.
அவரது செய்தி அறிக்கையில், “மிகப் பெரிய சோகமாக இருக்கிறது, ஆனால்… அவருடைய அன்புக்குரிய சகோதரனுடன் சேர வேண்டும் என்பது அவருடைய ஆசை. அவருக்கு அது ஒரு விடுதலை” என்று செயின்ட்-கேத்தரின்-லேபர் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தவெல்லா கூறினார்.
லூசில் ராண்டன் முதல் உலகப்போருக்கு முன்பே பிறந்தவர். அவர் பிறக்கும்போது நியூயார்க் அதன் முதல் சுரங்கப்பாதையை திறந்தது. பிரான்ஸ் அதன் புகழ்பெற்ற டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தை ஒரு முறை மட்டுமே அரங்கேற்றிஇருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply