போரினால் கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும்
போரினால் பாதிக்கப்பட்டு கால், கை களை இழந்தவர்களுக்கு செயற்கை அவய வங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடை முறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இத் தகவலைத் தெரிவித்தார். வவுனியா மனிக் முகாம் பிரதேசத்துக்கு நேற்றுக்காலை விஜயம் மேற்கொண்ட போது இந்தியத் தூதுவர் இத்தகவலை வெளியிட்டார். தூதரக அதிகாரிகளுடன் நேற்றுக் காலை வவுனியாவுக்கு வருகைதந்த அலோக் பிரசாத், வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ், வடக்கு இடம் பெயர்ந்த மக்களின் பணிகளுக்கான தகுதிவாய்ந்த அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின ஆகியோருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் மனிக் முகாம் பிரதேசத்துக்குச் சென்று மக்களின் நிலைமையைக் கேட்டறிந்தார்.
மழைகாலம் ஆரம்பமாவதுற்கு முன்னார் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் வடிகால் அமைப்பு வேலைகளைப் பார்வையிட்டார். கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் உள்ள ஆலயத்துக்கு சென்று வழிபட்ட தூதர், பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கு கல்விசார் உபகரணங்களை வழங்கினார்.
இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முன் மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்று அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply