இலங்கைத் தமிழர்களை நிரந்தரமாக தமிழகத்தில் குடியமர்த்த முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுறுத்தல்
இலங்கையிலிருந்து வந்து 10, 20 ஆண்டுகளாக தமிழகத்தில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை நிரந்தரமாக தமிழகத்திலேயே குடியமர்த்த செய்ய வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெறற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இலங்கைத் தமிழர் இங்கு நாம் நாட்டில் அகதிகளாக உள்ளனர். இலங்கையில்முகாம்களில் உள்ள மக்கள் அகதிகளாக பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை வெகு விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் வலியுறுத்துகிறோம், இதற்காக இந்திய அரசுடன் சேர்ந்து குரல் கொடுத்தும் , வலியுறுத்தியும் வருகிறோம். .
அதே சமயத்தில் தமிழகத்தில் கடந்த 10, 20 ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து குடியேறிய இலங்கை தமிழ் அகதிகளை இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு இங்கு குடியமர்த்த வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply