அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி: அமைச்சர் நிமல்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலு ள்ள யுத்த குற்றச் செயல்கள் தொடர்பான பிரிவில் இலங்கைக்கு எதிராகத் தற்போது சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியும், சில அரச சார்பற்ற நிறுவனங்களும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள யுத்த குற்றச் செயல்கள் பிரிவுடன் சேர்ந்து இச் சூழ்ச்சியை மேற்கொள்ளுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எமது ஜனாதிபதியையும், பாதுகாப்புத்துறையின் முக்கிய உயரதிகாரிகளையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன்பாகக் கொண்டு செல்லும் வகையிலேயே இச் சூழ்ச்சி இடம் பெறுவதாகவும் அவர் கூறினார்.தென் மாகாண சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புலிப் பயங்கரவாதம் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது. அப் பயங்கரவாதத்தின் தலைவர்கள் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கின்றார்கள். இதனால் வேதனை அடைந்திருக்கும் சிறு குழுவினர் இலங்கைக்கு எதிரான இச் சூழ்ச்சியை முன்னெடுக்கின்றனர். இச் சூழ்ச்சி அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களத்திலுள்ள யுத்த குற்றச் செயல்கள் தொடர்பான பிரிவில் மேற்கொள்ளப்படுகின்றது. இது குறித்து நம்பத் தகுந்த தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் திலுள்ள யுத்த குற்றச் செயல்கள் தொடர்பான பிரிவில் இலங்கைக்கு எதிராகத் தற்போது சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தென் மாகாண சபைக்கான ஐ. ம. சு. கூ. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
இச் சூழ்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் இலங்கையையும், இலங்கை அரசாங்கத்தையும் யுத்த குற்றச் செயல்களில் ஈடுபடும் தரப்பினராகக் காட்ட முயற்சி செய்கின்றனர். நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை கருத்தில் கொண்டுதான் ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவை பாதுகாப்புத் தரப்பினர் நடைமுறைப்படுத்தினர். இது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. இங்கு தேச நலனுக்கு முதலிடமும், முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது.
ஆகவே, தென் மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியை 80 சதவீத வாக்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெறச் செய்து முழுநாட்டு மக்களும் ஜனாதிபதியுடனும், பாதுகாப்பு தளபதிகளுடனும் உள்ளனர் என்பதை சர்வதேச சமூகத்திற்குக் காட்டுவது அவசியம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply