காஸாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அனுமதி
காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் .காமினி செனரத் யாப்பா, தூதரகம் இதனைத் தெரிவித்ததாக தெரிவித்தார்.
அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர்.
அதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பலஸ்தீனத்திலுள்ள பிரதிநிதி அலுவலகமும் செய்து வருகின்றன. அதன்படி அவர்கள் பத்திரமாக எகிப்தை அடையப் போகிறார்கள். அதைத் தவிர இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலில் தற்போதைக்கு சிறப்புச் சூழல் இல்லை.
இதேவேளை, காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்ததாகவும், அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. என காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply