பிரபல பாடகர் உள்ளிட்ட ஏழு பேரை கொலை செய்யத் திட்டம்: பாதாள உலகக் குழுக்களின் அடுத்த நகர்வா என சந்தேகம்?

பாதாள உலகக் குழுக்களின் பிரபல தலைவரான, தற்போது பிரான்ஸில் தலைமறைவாகி வாழும் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் டுபாயில் தலைமறைவாகி இருக்கும் லொக்கு பெட்டீ என்பவரும் இணைந்து இலங்கையின் பிரபல பாடகர் மற்றும் நடிகர் ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிரபல பாடகர் மற்றும் நடிகர் உள்ளிட்ட ஏழு பேர் பாதாள உலகக் குழுக்களிடமிருந்து இலட்ச கணக்காண பணத்தைப் பெற்று அதனை மீள வழங்காத காரணத்தினால் இவ்வாறு கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை பட்டியலில் காணப்படுவதாக கூறப்படும் இந்த பாடகர் மற்றும் நடிகர் உள்ளிட்ட சிலரை, இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் பாதாள உலகக் குழுவொன்று திட்டமிட்ட நிகழ்வொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதில் கலந்துக்கொள்ள பாதாள உலகக் குழுக்கள் தலைமறைவாகியுள்ள நாட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொலைத் திட்டம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்தூவவிடம் விசாரித்த போது, இவ்வாறான ஒரு தகவல் அதிகளவில் பரவி வருவதாக தெரிவித்தார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை செயற்படுத்தி இந்தக் கொலைத் திட்டம் தொடர்பிலான உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கஞ்சிபாணி இம்ரான் மற்றும் லொக்கு பெட்டீ எனப்படும் பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் இருவரும் இணைந்தே க்ளப் வசந்தவை கொலை செய்யத் திட்டமிட்டதை உறுதி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply