பொலிஸ் அதிகாரியை கத்தியால் தாக்கிய நபர்: பாரீஸ் நகரில் பகீர் சம்பவம்

பாரீஸ் நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்கிய நபரை தற்காப்புக்காக பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் அந்த நபர் படுகாயமடைந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 26ம் திகதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது நகர நிர்வாகத்தை கலக்கமடைய செய்துள்ளது.

தொடர்புடைய சம்பவம் Louis Vuitton அங்காடி ஒன்றில் துவங்கியுள்ளது. அந்த நபரை வெளியேற கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

ஆனால் பொலிசார் நெருங்கவும், அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிசாரை தாக்கியுள்ளான். இதில் பொலிசார் ஒருவரின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இன்னொரு பொலிசார் தாக்குதல்தாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அந்த நபர் மரணமடைந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.

முன்னதாக புதன்கிழமை மதியத்திற்கு மேல் வடக்கு பாரீஸில் உணவகம் ஒன்றின் மீது சாரதி ஒருவர் தமது வாகனத்தை மோதியுள்ளார். இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

திங்களன்று, வடக்கு பாரீஸில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் 40 வயதுடைய ஒருவரால் ஒரு ராணுவ அதிகாரி முதுகில் குத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply