நாடே எதிர்ப்பார்க்கும் புதையல்

வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது.

நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள இடத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று மூன்றாவது நாளாகவும் குறித்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் பல்வேறு நபர்கள் புதையல் தேடும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் இங்கு அகழாய்வு மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தனகல்ல நீதவான் வழங்கிய உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு வெயாங்கொடை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அகழ்வாராய்ச்சிக்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதன்படி நேற்றும், முந்தினநாளும் அங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் நேற்று பிற்பகல் வரையிலும் அதனை நிறைவு செய்ய முடியாத நிலையில், பாரிய கல் ஒன்று கிடைத்ததையடுத்து நேற்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply