பொதுநலவாய நாடுகள் நிர்வாகச்சபை தலைமைத்துவம் இலங்கைக்கு
பொதுநலவாய நாடுகளின் செயலகத்தின் நிர்வாகச்சபையின் தலைமைத்துவப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் 54 நாடுகளின் ஏகமானதான தீர்மானத்தின் அடிபட்படையில் இலங்கைக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 11ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் நிர்வாகச் சபைக் கூட்டத்தில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளை செயற்படுத்தும் பிரதான நிறுவனமாக இந்த நிர்வாகச் சபை காணப்படுகிறது. அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாடுகளில் முன்மொழியப்படும் யோசனைகளை நடைமுறைப்படுத்துதல், அவற்றை மீளாய்வுசெய்தல், கொள்கைகள் மற்றும் பிரச்சினைகளை தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல், பொதுநலவாயத்தின் செயற்பாடுகள் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்தல், கணக்காய்வு அறிக்கையை பரீட்சித்தல் மற்றும் 4 வருட திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல பொறுப்புகள் பொதுநலவாயத்தின் நிர்வாகச் சபைக்க வழங்கப்பட்டுள்ளது.
பொதுநலவாயத்தில் ஆசிய, ஆபிரிக்கா,அமெரிக்கா, கரிபியன் தீவுகள், ஐரோப்பா, தென் பசுபிக் வலயங்களை சேர்ந்த 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 1949 ஆம் ஆண்டு பொதுநலவாயத்தில் அங்கத்தும் பெற்ற இலங்கை அதன் 6வது ஆரம்பகால உறுப்பு நாடாகும். இந்த நிலையில் எதிர்வரும் 2013 ஆம் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply