தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு புரியவில்லை : கரு ஜயசூரிய

பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.நாட்டில் மேலும் அதிகளவு இராணுவ முகாம்களை உருவாக்குவதற்கும், கைதிகளை தடுத்து வைப்பதற்கான தடுப்பு முகாம்களை உருவாக்குவதற்கும் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு புரியவில்லை எனவும், அரசாங்கத்தின் கொள்கைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் மொத்த செலவுகளில் 20 வீதம் பாதுகாப்புச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்கனை தீர்ப்பதற்காக அதிகளவு பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.யுத்த காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இராணுவ தளவாடங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காகவே அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply