புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சு நடத்தத் தயாராகிறது அரசு
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்கு படுத்தியுள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாகக் கொண்டிருக்கும் எண்ணக்கருவை மாற்றுவதற்காக புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் முதலீட்டு ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார்.
தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பேச்சுவார்த்தைக்கு சமாந்திரமாக புலம்பெயர்ந்த தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் படக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொளவது குறித்தும் கருத்துகள் பரிமாற்றிக்கொள்ளபடவுள்ளதாக அறியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply