வன்முறையோ பிரிவினையோ மீண்டும் ஏற்பட இடமளியேன்: ஜனாதிபதி
நாட்டில் மீண்டும் ஒருமுறை வன் முறை ஏற்படவோ அல்லது பிரி வினை ஏற்படவோ ஒரு போதும் இடமளிக்கமாட்டேன். அனைவரும் தமக்கிடையிலான பேதங்களை மறந்து இலங்கை, பொருளாதாரத்திலும் சமூக ரீதியிலும் சுபீட்சமடைய ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் முதலாவது பாரா ளுமன்றத்தின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பி னர்களில் ஒருவருமான எச். ஸ்ரீ நிஸ்ஸங்கவின் ஞாபகார்த்த நிகழ்வு வெள்ளவத்தையில் உள்ள ஸ்ரீ நிஸ்ஸங்க மன்றத்தில் கடந்த சனிக் கிழமை நடைபெற்றது. இதில் கல ந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கூறிய வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறியதாவது:- நாட்டில் வெவ்வேறு சமயங்களையும் இனப் பிரிவுகளையும் சேர்ந்துள்ள மக்கள் வாழுகிறார்கள். அவர்கள் அனைவரும் இலங்கைத் தாயின் பிள்ளைகளாவர்.
பிரிவினைகள் எம்மைக் கட்டுப்படுத்திவிட் டால் எமது உண்மையான ஆற்றலைத் தெரிந்துகொள்ள முடியாது. நாம் பிரிவினை மோதல் என 30 ஆண்டுகளைக் கழித்துவிட்டோம். இனிமேல் இலங்கையரான நாம் அனைவரும் அமைதியையும் இன ஒற்றுமையையும் தேட வேண்டும்.
தாய்நாட்டின் தேவைக்கு ஏற்றவகையில் செயற்பட வேண்டியது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும்.
கடந்த காலத்தில் தேசாபிமானிகள் மிகுந்த அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் செயற்பட்டனர். அவர்கள் சென்ற பாதையில் நாட்டை இட்டுச்செல்ல வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.
எமக்கு உள்ள சவால்களையிட்டு நாம் தளர்ந்து விடக்கூடாது. மிகவும் கஷ்டத்துடன் கிடைத்த ஜனநாயகத்தையும் மக்கள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் இழக்க முடியாது. சவால்களுக்கு முகம்கொடுத்து நாட்டை நிரந்தர சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும்.
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவ வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் அங்கு குறிப்பிட்டார்.
எச். ஸ்ரீ நிஸ்ஸங்க பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அவர் நாட்டை நேசித்த அரசியல்வாதி என்றும் மக்கள் ஆதரவையும் மதிப்பையும் பெற்றவராக அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.
அமரர் ஸ்ரீ நிஸ்ஸங்கவின் வீட்டிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் அங்கு ஞாபகமூட்டினார்.
இந்த நிகழ்வையடுத்து ஸ்ரீ நிஸ்ஸங்க நூதனசாலையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் மாயா மாவத்தையை எச். ஸ்ரீ. நிஸ்ஸங்க மாவத்தை என்று பெயரும் மாற்றினார்.
ஸ்ரீ நிஸ்ஸங்க ஞாபகார்த்த உரையை முன்னாள் பாராளுமன்ற செயலாளர் ஆற்றினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply