சங்கரி போன்றவர்கள் தாழ்ந்து கொண்டிருக்கும் கப்பல், அதில் யாரும் பயணிக்க வேண்டாம்
ஆனந்த சங்கரி போன்றவர்கள் இன்று தாழ்ந்து கொண்டிருக்கும் கப்பல்கள் போன்றவர்கள் என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அதில் ஏறி ஓடி சவாரிசெய்ய நாங்கள் விரும்பக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பழுகாமத்தில் உள்ள வள்ளுவர் முதியோர் சங்கத்தின் ஒராண்டு விழாவில் பிரத அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
30 வருடகாலமாக எதுவித அபிவிருத்தியும் அற்ற நிலையில் யுத்தத்தை மட்டுமே நடத்திவந்தோம். எனவே இந்த யுத்தம் நிறைவடைந்து எமது மண் மீட்க்கப்பட்டது ஒரு குறுகிய காலந்தான் இந்த குறுகிய காலத்துக்குள் பாரிய குறைபாடுகள் இருக்கின்றது.
ஆகவே இந்த 30 வருட இடைவெளியை ஒரு குறுகிய காலத்துக்குள் கட்டியெழுப்பலாம் என்பது முடியாத விடயம். ஒரு மூன்று மாதம் மூன்று வருடம் என்பது ஒரு பொய்யான விடயம். ஆகவே எங்களுக்கு குறைந்தது 10 வருடமாவது தேவை.
ஆனால் நாங்கள் கட்டம்கட்டமான வளர்ச்சியை அடைந்து வருகின்றோம். இன்று எமது இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதில்லை, கடத்தப்படுவதில்லை, இரவிலே எவரும் செல்லலாம் வரலாம், பெண்மணியொருவர் இரவிலே நடந்செல்க்கூடிய பாதுகாப்பு உத்தரவாதம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்தளவு அமைதியை உங்களுக்கு ஏற்படுத்திதந்தவன் நான்.இன்று சகல உரிமையும் படைத்த மக்களாக நாங்கள் இருக்கின்றோம். நான் எடுக்கும் எந்தமுடிவும் மட்டக்களப்பு மக்களின் அபிவிருத்திக்காகத்தான் இருக்கும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. நீண்டகாலமாக உங்களுக்காக உழைந்துவருபவன் நான் மட்டும்தான். அதற்கிடையில் வந்தவர்கள்தான் இன்று திரிபவர்கள் எல்லோரும்.
அண்மையில் எமது பழுகாமத்துக்கு ஆனந்தசங்கரி ஐயா வந்துசென்றதாக அறிகின்றேன். இவர்கள் போன்றவர்கள் இன்ற தாழ்ந்துகொண்டிருக்கும் கப்பல். அதில் ஏறி ஓடி சவாரிசெய்ய நாங்கள் விரும்பக்கூடாது.எங்களது மண்ணை கட்டியெழுப்பவும் எங்களது மண்ணை காப்பாற்றவும் மட்டக்களப்பானுக்கு முடியும்.இதை மறுப்பவர்கள் எமக்கு தேவையில்லை.
ஆகவே இன்னுமொரு தலைமைக்குள் நாங்கள்போய் இருந்துகொண்டு இன்னும் துன்ப துயரங்களை அனுபவிக்க நாங்கள் தயாராகயில்லை.
ஏன்னென்றால் எமது இளைஞர்களை நாங்கள் யாருக்காக பலிகொடுத்தோம், எங்கு பலிகொடுத்தோம், வடக்கிலேயே பலிகொடுத்தோம். இன்னும் இன்னும் அவர்கள் இங்கு வந்து ஏமாற்றி எமது மக்களை வந்து திசை திருப்பிச்செல்ல நாங்கள் அனுமதிக்ககூடாது. இன்னுமொரு பாரிய அழிவு வருவதற்கு நாங்கள் இடம்வைக்கக்கூடாது.
நாங்கள 30 வருடாக உங்களுடன் இருக்கின்றோம். இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள்தான் எங்களுக்கும் தெரியும் இந்த மண்ணை எவ்வாறு வளர்க்கவேண்டும், எவ்வாறு அபிவிருத்தி செய்யவேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply