ஆப்கானில் ஐ.நா. பணியாளர்கள் 20 பேர் படுகொலை
ஆப்கானிஸ்தானில் சேவையில் ஈடுபட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் 20 பணியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். வட ஆப்கான் நகரான மஷார்-ஹீ-சரீப் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பணியாளர்களில் ஐவர் நேபாளிகள் எனவும் மற்றையவர்கள் நோர்வே சுவீடன், ரஸ்யா, ரோமானியா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் உள்ள தேவாலயமொன்றில் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் முகமாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை மேற்கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது. இச்சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர் இருவரின் தலைகளை வெட்டியும் மற்றையவர்கள் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டும் கொலைசெய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply