முதலாவது இனிங்ஸில் இலங்கை 6 விக்கட்டுக்களை இழந்து 274 ஓட்டங்கள்
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள வன்கடே மைதானத்தில் இடம்பெற்றுவரும் உலக்கிண்ண துடுப்பாட்டப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலில் துடுப்பாட ஆரம்பித்த இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை எடுத்துள்ளது. கடைசி 10 ஓவர்களிலும் சராசரியாக அதிக ஓட்டங்கள் பெறப்பட்டன. கடைசி 4 ஓவர்களிலும் ஆட்ட ஓட்ட வீதம் 14 ஆக இருந்தது.
இந்தியாவின் சிறந்த தடுப்புமுறை இலங்கையணியின் ஓட்ட எண்ணிக்கையை 30வது ஓவர் வரையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது
இந்தியா சார்பில் ஜனாதிபதி பிரதீபா பட்டேலும் இலங்கை சார்பில் அதன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் உட்பட பல அரசியல்வாதிகள் நடிகர்கள் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டிகளில் சுமார் நாற்பத்தையாயிரம் பேர் போட்டிகளை நேரடியாகக் கண்டு களிக்க ஆயிரம் மில்லியனிற்கு மேலான மக்கள் இந்தப் போட்டிகளை கண்டுகளிக்கின்றர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply