வெற்றியின் சிகரத்திற்கு வந்த இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்படிகள் வரை சென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் வாழ்த்து க்களைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள செய்தியில், உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இல ங்கை அணி மூன்று தடவைகள் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
இது இலங்கை அணி பெற்று க்கொண்ட பெறும் பாக்கியம். என் றாலும் எமது கிரிக்கெட் அணியின் திறமையாலேயே உலகக் கிண்ண த்தை ஒரு தடவை எம்மால் வென் றெடுக்க முடிந்தது.
இம்முறை உலகக் கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய மைல் கல்லா கும்.
இந்த இலக்கை எட்ட குமார் சங்கக்கார தலை மையிலான இலங்கை அணியினரால் முடிந் துள்ளது.
அவர்களின் இவ் வெற் றிக்காக முழுநாட்டு மக்கள் சார்பிலும் எனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளு கின்றேன். முழு நாட்டு மக்களும் உங்களது வெற்றிக்காக ஒன்றுபட்டிருந்தது போல் எதிர்காலத்திலும் உங்களது வெற்றிகளுக்காக மக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகல உறுப்பினர்களையும் சந்தித்து நாட்டு மக்களின் நல்வாழ்த்துக் களைத் தெரிவிக்கவுள்ளேன் என் றும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply