பயங்கரவாதம், போதைவஸ்துக்கு எதிரான சார்க் நாடுகளின் பொலிஸ் மா அதிபர்கள் மாநாடு
சார்க் நாடுகளின் பொலிஸ் மா அதிபர்களது மாநாடு இன்றும் 4ம் திகதியும் நாளை 5ம் திகதியும் கொழும்பில் நடைபெறவுள்ளது. நாடுகளின் எல்லைப் புறங்களுக்குக்கிடையில் இடம்பெறுகின்ற பல தரப்பட்ட குற்றச் செயற்பாடுகள் குறித்து சார்க் நாடுகளின் பொலிஸ்மா அதிபர்கள் இங்கு கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு குடியரசு, நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் பொலிஸ் மா அதிபர்கள் பயங்கரவாதத்தை முறியடிப்பதுடன் பாலியல் ரீதியான சர்வதேச போதைவஸ்து கடத்தல்காரர்களை கண்டு பிடித்து தண்டிப்பதிலும் நல்ல அனுபவம் இருக்கின்றது. இவர்கள் தத்தமது அனுபவங்களை பரிமாறிக் கொள்ள கொழும்பில் நடைபெறவுள்ள இந்த மாநாடு அரிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும்.
சார்க் நாடுகளில் பயங்கரவாதம்மற்றும் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபடும் சட்டவிரோதக் கும்பல்களை பிடிப்பதற்கு அவசியமாக இரகசிய தகவல்களை பொலிஸார் பரிமாறிக் கொள்ள இவ்மாநாடு உதவியாக இருக்கும். விரைவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறவுள்ள சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களுக்கு தேவையான தகவல்களை திரட்டிக் கொடுப்பது இந்த பொலிஸ் மா அதிபர்கள் மாநாட்டின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply