முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இல்லத்தில் இராணுவ சோதனை

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்  இல்லத்தில் இராணுவத்தினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.சோதனை நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்தத் தேடுதல் நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சாதாரண சட்டத்தின் கீழ் இவ்வாறான தேடுதல்கள் காவல்துறையினராலேயே மேற்கொள்ளப்படும் என கட்சி சுட்டிக்காட்டிள்ளது.எவ்வாறெனினும், என்ன காரணத்திற்காக தேடுதல் நடத்தப்பட்டது என்பது இதுவரையில் புலனாகவில்லை.

இதேவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பீரதீப் மாஸ்டர் கைது செய்யப்பட்டமைக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.அண்மையில் மட்டக்களப்பில்  ஆதரவாளரும், கருணா அம்மானின் ஆதரவாளரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply