தொல்லைகளால் அவதியுறும் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன நாளை ஜனாதிபதியைச் சந்திக்கிறார்
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் நாளை வியாழக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். முன்னறிவித்தல் இன்றி கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவரைக் கைது செய்தமை தொடர்பிலும் முதலமைச்சரின் வீட்டில் இராணுவத்தின் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டமையால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு தொடர்பாக கலந்துரையாடும் வகையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பில் இன்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply