இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோருக்கு த.தே.கூ அஞ்சலி

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதனை தாம் முதலே கூறியதாகவும் அதற்கு ஐ.நா அறிக்கை தற்போது உரமிட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி சக்தி இல்லத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோருக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
மேலும், காலை 10 மணி தொடக்கம் 12 மணி உயிரிழந்தோர்களுக்காக விசேட அஞ்சலி பூஜை நடந்ததாகவும், எதிர்கால சந்ததியினருக்கும் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை வரலாற்று ரீதியாக கொண்டு சேர்க்கவும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டும் என அவர் தெரிவித்தார்.
 
இன்றைய நிகழ்வின் போது சக்தி இல்லத்தில் உள்ள தாய் தந்தையற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான அரியனேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply