அல்குவைதா புதிய தலைவராக எகிப்து மாஜி போலீஸ் தேர்வு!

அல்குவைதா பயங்கரவாத இயக்கத்தின் தற்காலிக தலைவராக எகிப்து நாட்டு முன்னாள் சிறப்பு படை அதிகாரி சைபல் ஆதல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாஜி போலீஸ் அதிகாரி பயங்கரவாத கும்பலுக்கு தலைவராகி இருப்பது சலசலப்பை எற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் அபோதாபாத் மாளிகையில் பதுங்கியிருந்த அல்குவைதா தலைவர் ஒசாம் பின்லாடன் அமெரிக்க படைகளின் அதிரடி வேட்டையால் கடந்த 2ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சைபல் ஆதல் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜவாஹிருல்லாவுக்கு கல்தா ? அல்குவைதாவின் அடுத்த தலைவராக ஜவாஹிருல்லா தான் தேர்வு செய்யப்படுவார் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் சைபல் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒசாமா பலியான பிறகு, துபாயில் இருந்து வெளியாகிய பத்திரிகை ஒன்றில் ஒசாமா மறைவிடம் குறித்து அமெரிக்காவுக்கு ஜவாஹிருல்லா தகவல் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒசாமா – ஜவாஹிருல்லா இடையே யார் தலைவராக இருப்பது என்பது தொடர்பாக போட்டி நிலவியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஜவாஹிருல்லாவுக்கு பதிலாக சைபல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply