இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அமைச்சர் நிமல் – எரிக் பேச்சு

அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா நேற்றுமுன்தினம் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
தற்போது ஒஸ்லோவில் தங்கியுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா மற்றும் அமைச்சர் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையிலான பேச்சில் கடந்த காலத்தில் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன் படிக்கை தொடர்பாகவும் அதன் பின்னரான பேச்சுத் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.நோர்வே வெளிவிவகார அமைச்சு அதி காரிகளையும் அமைச்சர் நிமல் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் போருக்குப் பின்னரான இலங்கை அரசியல் முரண்நிலை, ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் தீர்வு முயற்சி என்பன குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்கொண்டு வரும் போர்க்குற்றச் சாட்டுக்களைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவக் கோரியே அமைச்சர் சிறிபால, எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்துப் பேசினார் என்று மற்றுமொரு தகவல் தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply