இந்தியாவைப் போன்ற வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவுக்கு அவசியம் : ஹில்லாரி

பொருளாதார ராஜதந்திரம்’ எனும் பொருளில் நியூயார்க் பொருளாதார கருத்தரங்கில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன்  இந்திய, பிரேலில் நாடுகளில் கடைபிடிக்கப்படும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கை அமெரிக்காவுக்கு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முக்கிய சக்தியாக அமெரிக்கா விளங்க வேண்டுமென்றால் வெளியுறவுக் கொள்கையின் மையப்பகுதியாக பொருளாதாரம் இருக்க வேண்டும். வளர்ந்துவரும் முக்கிய நாடுகளான இந்தியாவும் பிரேசிலும் இவ்வாறே செய்துள்ளன. இந்த இரு நாடுகளின் தலைவர்கள் எந்த சர்வதேச சவால்களை அணுகினாலும் அதனை உள்நாட்டுப் பிரச்னை போலவே அணுகுகின்றனர். அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே இப்பிரச்னை எந்த அளவுக்கு தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதாகும். இதே கேள்வியை அமரிக்காவும் கேட்கப் பழக வேண்டும்.

அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திர இலக்கே தனது பொருளாதாரத் தலைமையை விரிவுபடுத்துவதும், உள்நாட்டில் மீண்டும் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதும்தான். உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு ‘பொருளாதார ராஜதந்திரம்’ குறித்த ஆலோசனைகள் அவ்வப்போது வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பெரும் பகுதி,’தேவையின் அடிப்படையில்’ பெரும் ஆபத்துகள் நிறைந்த பகுதிகள் குறித்து கவனிக்க வேண்டியதாயிற்று. இனி வரும் ஆண்டுகளில் நமது வெளியுறவுக் கொள்கை, எங்கெங்கு அமரிக்காவுக்கு வாய்ப்புகள் உள்ளனவோ அந்தப் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். உலகுக்கு தலைமையேற்கும் தகுதியை அமரிக்கா தக்கவைத்துக் கொள்ள வேண்டும். உலகின் முக்கியத்துவமும் பொருளாதார ஈர்ப்பு விசையும் இப்போது கீழை நாடுகளை நோக்கித் திரும்பியுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்துகிறது. அட்லாண்டிக் பிராந்தியத்தில் உறவுகளைப் பலப்படுத்த ஒரு நூற்றாண்டுக் காலமாக அமெரிக்கா மேற்கொண்டு வந்துள்ள நடவடிக்கைகள் தற்போது பலன் தருகிறது.

பொருளாதார நெருக்கடியால் அரசுகள் கவிழ்வதை நாம் காண்கிறோம். டுனீசியாவின் ஒரு சந்தைப் பகுதியில் உருவான புரட்சி இன்று அந்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்போது ஐரோப்பா மிக மோசமான பொருளாதார சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply