நாட்டிற்கு சமாதானத்தை உருவாக்கிக் கொடுத்த இராணுவ வீரர்கள் பலி கொடுக்கப்பட மாட்டார்கள் : நிமால்

நாட்டிற்கு சமாதானத்தை உருவாக்கிக் கொடுத்த இராணுவ வீரர்கள் பலி கொடுக்கப்பட மாட்டார்கள் என்பதுடன் அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கம் கூட்டுப் பொறுப்புடன் செயற்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று விவாதிக்கப்பட்ட ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்கவின் தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
ஜெனீவாவுக்கு சென்ற அனைத்து குழுக்களும் அரசாங்கத்தை அச்சுறுத்தல்களில் இருந்து மீட்பதற்கு அதிக பட்ச முயற்சிகளுடன் கூட்டுப் பொறுப்புடனேயே செயற்பட்டன. எதிர்காலங்களிலும் இவ்வாறே செயற்படும். படையினரை பலி கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூறப்பட்டது. எனினும் இந்த நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்த பாடுபட்ட படையினரை ஒரு போதும் பலி கொடுக்க இடமளியோம் என்பதனை அரசாங்கத்தின் சார்பில் நான் தெரிவித்து கொள்கின்றேன்.
 
இராணுவத்தினுள் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் படையினரை பலி கொடுப்பதாக அமைந்து விடாது தவறுகள் இடம் பெற்றிருந்தால் அது பற்றி விசாரணைகள் செய்வது தான் தார்மீக பொறுப்பாகும்.
 
நாட்டிற்கு சமாதானத்தை ஏற்படுத்தி கொடுத்த படையினரை பலி கொடுக்க இடமளியோம் என்பதுடன் படையினருக்கு சிறப்பான நலன்புரி வசதிகளையும் அர சாங்கம் செய்து கொடுத்து வருகின்றது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply