ஜெனீவா பிரேரணையில் திருத்தம் : இலங்கை ஆதரவு நாடுகள் கோரிக்கை
ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்குத் திருத்தம் கொண்டு வரும்படி அமெரிக்கா அழுத்தத்தை பொறுக்க முடியாத இலங்கைக்கு ஆதரவான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.
ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் இலங்கைக்கு எதிரான தமது பிரேரணைக்கு ஆதரவளிக்கும்படி அமெரிக்கா அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.
இதனால் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள முடியாத இலங்கைக்கு ஆதரவான நாடுகள், மேற்படி பிரேரணையிலுள்ள கடுமையான சரத்துக்களை தளர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
எந்த வகையிலாவது இந்தப் பிரேரணையை முறியடிக்க இலங்கை குழுவினர் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர் எனவும் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply