பிரபாகரனின் கடைசி மகனும் இறப்பு தொடர்பில் செனல்-4 புதிய தகவல்

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் தொடர்பில் தயாரிக்கப்பட்ட பிறிதொரு காணொளியில் பிரபாகரனின் கடைசி மகன் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இக் காணொளியில் இறந்த நிலையில் உள்ள 12 வயதுச் சிறுவன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த 12 வயதான பாலச்சந்திரனின் மார்புப் பகுதியை 5 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன. சிறுவனுக்கு அருகில் ஐவரின் சடலங்கள் கிடக்கின்றன.

அந்த காட்சிகள் அடங்கிய காணொளி சனல் 4 தொலைக்காட்சியில் எதிர்வரும் புதன்கிழமை இரவு இலங்கை நேரப்படி இரவு 10.55க்கு ஒளிபரப்படவுள்ளது.

இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத குற்றங்கள் எனும் தலைப்பில் இந்த இரண்டாவது காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐக்கியநாடுகள் மனித உரிமை கூட்டத் தொடர் இடம்பெற்று வருகிறது. அதில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நிலையில் இக் காணொளி வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப் பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும் அநேக நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த போதும் இந்தியா இதுவரை எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply