பருத்தி ஏற்றுமதித் தடையை இந்திய அரசு கைவிட்டது
இந்தியா கடந்த திங்கட்கிழமையன்று அறிவித்திருந்த பருத்தி ஏற்றுமதித் தடையை உடனடியாகக் கைவிட்டுள்ளது.மத்திய அரசு அறிவித்திருந்த பருத்தி ஏற்றுமதித் தடைக்கு நாட்டின் பல பாகங்களிலும் பருத்தி விவசாயிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்த நிலையில், தடையை அறிவித்து ஒருவாரம் கூட கடக்க முன்னதாகவே அந்த தீர்மானத்தைக் கைவிட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தி உள்நாட்டு ஆலைகளுக்கு முழுமையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே ஏற்றுமதித் தடையை அறிவித்ததாக அரசு தனது கொள்கையை நியாயப்படுத்தியிருந்தது.
ஆனால், இந்த நடவடிக்கையால் தாங்களே கடுமையாகப் பாதிக்கப்படுவதாக பருத்தி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, தன்னிடம் ஆலோசிக்கப்படாமலேயே அதிகாரிகள் இந்த தடையை அறிவித்திருந்ததாக இந்திய விவசாயத்துறை அமைச்சரும் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply