காலியில் தமிழர்கள் மீது தாக்குதல் பின்னணியில் அரசியல்வாதி

காலி – திலிதுற தோட்டத்தில் புதுவருட தினத்தன்று தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் கத்திகள், தடிகள், பெற்றோல் குண்டுகள் சகிதம் வாகனத்தில் வந்தவர்கள் ஐந்து வீடுகளை தீவைத்து எரித்துவிட்டு, இன்னும் பல வீடுகளை தாக்கிச் தேப்படுத்திச் சென்றுவிட்டதாகவும் பிதேசத்தைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து தமது பாதுகாப்புத் தொடர்பில் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். இதேவேளை இந்த சம்பவத்துடன் பிரதேச அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பிரதேசவாதிகள் குற்றஞ்சாட்டினார்கள். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களிடமும் பிரதேச காவல்துறை அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சனை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் ஆகியோர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர். ஆனால் இந்த சம்பவத்தில் குறித்த பிரதேசசபை உறுப்பினர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுப் பற்றி முறைப்பாடு கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிப்பட்ட ரீதியில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று அஜித் ரேரூசூ3006;ஹண கூறினார். சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply